Homeசெய்திகள்What is Freelancing in Tamil | ஃப்ரீலான்சிங் என்றால் என்ன?

What is Freelancing in Tamil | ஃப்ரீலான்சிங் என்றால் என்ன?

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் Freelancing என்றால் பகுதி நேர வேலை என்று பொருள். Freelancer என்றால் பகுதி நேர வேலை செய்பவர் என்று பொருள். What is freelancing in tamil | ஃப்ரீலான்சிங் என்றால் என்ன? என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.

Freelancing என்றால் என்ன?

ஃப்ரீலான்சிங் என்பது பகுதி நேர அடிப்படையில் தனது வாடிக்கையாளர்களிடம் (ஒரு தனி நபரிடமோ அல்லது ஒரு கம்பெனியிடமிந்தோ) இருந்து வேலையை பெற்று முடித்து கொடுப்பதாகும். உலகில் எந்த மூலையில் இருந்தும் நாம் வாடிக்கையாளர்களை பெற முடியும்.

ஃப்ரீலான்சர் என்றால் தனது வாடிக்கையாளர்களிடம் (ஒரு தனி நபர் அல்லது ஒரு கம்பெனி)  வாங்கிய வேலையை பகுதி நேர அடிப்படையில் முடித்துக்கொடுப்பவர். அந்த வேலையை முடித்து கொடுத்தவுடன் அதற்கு உண்டான பணத்தை பெற்றுக்கொள்வார்கள்.

ஒரு freelancer ஒரே நேரத்தில் பல வாடிக்கையாளர் அல்லது பல கம்பனிகளுக்கு வேலை செய்ய முடியும்.

Freelancing தொடங்குவது எப்படி?

இந்த ஃப்ரீலான்சிங் வேலையை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம். உங்களுக்கு தேவை ஒரு லேப்டாப், மொபைல், மற்றும் இன்டர்நெட். இவை இருந்தால் நீங்கள் உங்கள் வேலையை வீட்டில் இருந்தே தொடங்கலாம்.

  1. உங்களுக்கு எதில் திறமை உள்ளதோ, அந்த வேலையை தேர்வு செய்யுங்கள்.
  2. உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களுக்கு உங்கள் சேவை தேவையென்றால் செய்து கொடுக்கலாம்.
  3. Facebook, instagram, twitter, போன்ற வலை தளங்களில் உள்ளவர்களை தொடர்புகொண்டு அவர்களுக்கு தேவையான வேலையை செய்து கொடுக்கலாம்.
  4. Freelancing செய்வதற்கு என்றே பல வெப்சைட்கள் உள்ளது. உதாரணமாக Fiverr, Upwork, Guru, Truelancer போன்ற வெப்சைட்டுகள் உள்ளன. இந்த வெப்சைட்களில் பதிவு செய்து கொள்ளலாம்.
  5. உங்கள் அருகில் உள்ள சிறு கடைகள் அல்லது கம்பெனிகளை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொடுக்கலாம்.

Freelancing என்ன வேலை செய்யலாம்?

Freelancingல் ஆன்லைன் மூலம் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். உங்களுக்கு எந்த துறையில் அறிவு, அனுபவம், விருப்பம் உள்ளதோ, அதை செய்யலாம். Freelancingல் செய்ய கூடிய சில வேலைகளை உதாரணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. Content writing
  2. Web designing
  3. Social media manager
  4. Copywriting
  5. Designing
  6. Graphic Designing
  7. Vedio editing
  8. Content creation
  9. Social media marketing
  10. Photography
  11. Translator
  12. Teacher
  13. Testing 
  14. Software developer 
  15. Data entry

இது போன்ற பல பல வேலைகள் உள்ளது. உங்கள் துறை சார்ந்த வேலையை தேர்வு செய்து பணம் ஈட்டலாம்.

Freelancing வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

  1. தற்போது அதிக தேவை உள்ள வேலையை தேர்ந்தெடுக்கவும்.
  2. தேர்ந்தெடுத்த வேலைக்கான  தகுதியை வளர்த்துக்கொள்ளவும்.
  3. பல்வேறு ஃப்ரீலான்சிங் வெப்சைட்களில் பதிவு செய்யவும்.
  4. Freelancing தளங்களில் உங்களுடைய profile சிறந்த முறையில் உருவாக்கவும்.
  5. உங்களுக்கு தெரிந்த விஷயங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். உங்களுடைய பழைய வேலைகளை attach செய்வதன் மூலம் வாடிக்கையாளரின் நம்பிக்கையை பெற முடியும்.
  6. சிறந்த ப்ராஜெக்ட்ஐ தேர்வு செய்து, வாடிக்கையாளரின் நம்பிக்கையை பெறும்படி உங்களுடைய proposal ஐ அனுப்பவும்.
  7. Client உடன் சிறந்த முறையில் பேச வேண்டும் (communication). அவர்கள் தேவையை தெளிவாக அறிந்து கொள்ளவேண்டும்.
  8. வேலையை சொன்ன நேரத்தில் முடித்து தர வேண்டும்.
  9. அவர்களுக்கு ஏதாவது மாற்றம் தேவை என்றால் அதை செய்து தர வேண்டும்.
  10. வாடிக்கையாளருடன் நல்ல உறவைப் பேணவேண்டும்.

Freelancing செய்ய என்ன படிக்க வேண்டும்?

Web Design, Content Writing, Social Media Marketing, Self Improvement, Digital Marketing, Career Development, Graphic Design, Digital Marketing போன்ற பல course கள் உள்ளன. இந்த course Udemy, Coursera, Skillshare,LinkedIn Learning and Udacity போன்ற பல்வேறு வெப்சைட்கள் மூலம் ஆன்லைன்லில் படிக்கலாம். Youtube ல் பல விடீயோக்கள் உள்ளன. அதை நீங்கள் இலவசமாக கற்கலாம்.

Freelancing நன்மைகள் என்ன?

Freelancing வேலை செய்வதால் பல நன்மைகள் உள்ளது. அதில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

  1. Freelancing ல் முக்கியமான நன்மை, உங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. அலுவலகங்களில் உங்களுடைய மேலதிகாரிகள் உங்களை கண்காணித்து கொண்டே இருப்பார்கள். அதனால் உங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் ஃப்ரீலான்சிங் செய்யும் போது நீங்கள் உங்களுடைய வேகத்துக்கு வேலை செய்யமுடியும்.
  2.  எப்போது வேலை செய்ய வேண்டும், வேண்டாம் என நீங்கள் முடிவு செய்ய முடியும்.
  3. நீங்கள் வாடிக்கையாளரிடம் இருந்து வேலையை வாங்கும் போதே முடித்து கொடுக்கும் நேரத்தை பற்றி பேசலாம்.
  4. நீங்கள் பயணம் செய்யும் போதும் வேலையை செய்ய முடியும். ஒரு laptop, மற்றும் internet connection இருந்தால் போதும். எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்ய முடியும்.
  5. பல புதிய விஷயங்களை கற்று கொள்ள முடியும். எனவே நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களின் எல்லையை விரிவு படுத்த முடியும்.
  6. உங்கள் திறமைக்கேற்ப எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்.
  7. உங்களுடைய சேவை வாடிக்கையாளருக்கு பிடித்து விட்டால் மீண்டும் மீண்டும் உங்கள் சேவையை பயன்படுத்திக்கொள்வார்கள்.

Freelancing தீமைகள் என்ன?

Freelancing நன்மை உள்ளது போல சில குறைபாடுகளும் உள்ளது. அவற்றுள் சிலவற்றை இங்கே காணலாம்.

  1. மாதம் நிரந்தர வருமானம் இருக்காது. ஒரு மாதம் அதிகம் மற்றும் ஒரு மாதம் குறையவும் வாய்ப்புள்ளது.
  2. சில சமயம் நீங்கள் வேலை முடித்த பின்னரும் வாடிக்கையாளரிடம் இருந்து பணம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.
  3. Time management மிகவும் முக்கியம். உங்களை கண்காணிக்க யாரும் இல்லை. எனவே நீங்கள் தான் உங்கள் வேலை செய்யும் நேரத்தை தீர்மானிக்க வேண்டும். உரிய நேரத்தில் உங்கள் வேலையை முடித்து கொடுத்தால்தான் உங்கள் வடிக்கையாளரிடமிருந்து மீண்டும் மீண்டும் உங்களுக்கு வேலை கிடைக்கும்.
  4. நீங்கள் உங்கள் திறமையை மேம்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். Freelancing துறையில் போட்டி அதிகம். நீங்கள் உங்கள் திறமையை வளர்த்து கொள்ளவில்லை என்றால் உங்கள் போட்டியாளர் அந்த இடத்தை பிடித்துக்கொள்வார்கள்.

FAQs

  1. Freelancing வேலை எளிதானதா?

    ஆம். நீங்கள் வீட்டில் இருந்தபடியே நீங்கள் விரும்பும் நேரத்தில் வேலை செய்யலாம். ஆனால் புதிதாக freelancing தொடங்கும் நண்பர்களுக்கு ஆரம்பத்தில் வேலை கிடைப்பது சற்று கடினமாக தான் இருக்கும்.

  2. ஃப்ரீலான்ஸர்கள் நன்றாக சம்பாதிக்க முடியுமா?

    உங்களுக்கு நல்ல திறமை, உழைப்பு மற்றும் அனுபவம் இருந்தால் நன்றாக சம்பாதிக்க முடியும். இதில் சம்பாதிப்பதுற்கு வரம்பு இல்லை.

  3. இந்தியாவில் Freelancing சட்டபூர்வமானதா?

    ஆம். இந்தியாவில் ஃப்ரீலான்சிங் சட்டபூர்வமானது.

  4. Freelancer முழுநேர வேலை செய்யலாமா?

    ஆமாம். Freenancer முழுநேரம் அல்லது பகுதி நேரமாக வேலை செய்யலாம். அது அவர் அவர் சொந்த முடிவாகும்.

  5. சிறந்த Freelance வெப்சைட் என்ன?

    Fiverr, Upwork, PeoplePerHour, TopTal மற்றும் Guru போன்ற பல வெப்சைட்கள் உள்ளன.

  6. Freelancing செய்வதற்கு அதிக தேவை உள்ள வேலை எது?

    Data entry, Web design, coding, content writing, social media marketing, graphic design, etc.

  7. Freelancing செய்ய என்ன படிக்க வேண்டும்?

    Freelancing செய்வதற்கு பள்ளி அல்லது கல்லுரி படிப்பு தேவை இல்லை. நீங்கள் செய்து கொடுக்கும் வேலைக்கு உண்டான அறிவு இருந்தால் போதுமானது.

  8. Freelancing செய்வதற்கு ஆங்கிலம் தேவையா?

    ஆங்கிலத்தில் மிகுந்த அறிவு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் வாடிக்கையாளர் பேசுவதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்க்கு புரியும் படி நீங்கள் பேச வேண்டும். அந்த அளவுக்கு ஆங்கிலம் போதுமானது.

Conclusion

அலுவலகம் சென்று வேலை செய்ய முடியாதவர்கள் அல்லது விருப்பம் இல்லாதவர்கள் வீட்டில் இருந்தே freelancing முறையில் வேலை செய்யலாம். இந்த freelancing வேலையை மாணவர்கள், வயதானவர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம். Freelancing முக்கியமான நன்மை என்னவென்றால், நீங்கள் விரும்பும் நேரத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்ய முடியும்.

இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் comment செய்யவும்.

National Pension Scheme பற்றி தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

RELATED ARTICLES

Most Popular