Homeசெய்திகள்Sukanya Samriddhi Yojana/செல்வ மகள் சேமிப்பு திட்டம்

Sukanya Samriddhi Yojana/செல்வ மகள் சேமிப்பு திட்டம்

Sukanya Samriddhi Yojana என்றால் என்ன?

Sukanya Samriddhi Yojana (SSY) அல்லது செல்வமகள் சேமிப்பு திட்டம் என்பது 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு சேமிப்புத் திட்டமாகும். இது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை 10 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் தொடங்கலாம். 

இந்த திட்டமானது பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு ஒரு சிறந்த திட்டமாகும். குழந்தை பிறந்த உடன் முதலீடு செய்ய தொடங்கினால் 21 வயதில் கணக்கு முதிர்ச்சி அடைந்து விடும். முதிர்ச்சி அடைந்த பணம் பெண் குழந்தைகளின் உயர் கல்வி அல்லது திருமண செலவிற்கு உபயோகமாக இருக்கும். இந்த திட்டத்தை நீங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு எடுத்து கூறி அவர்களை கணக்கு தொடங்க ஊக்கப்படுத்தலாம்.

Table of Contents

 Sukanya Samriddhi Yojana / செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் நன்மைகள்:

உயர் வட்டி விகிதம்- PPF போன்ற பிற வரி சேமிப்பு திட்டங்களுடன் ஒப்பிடும்போது, SSY அதிக நிலையான வருவாய் விகிதத்தை (தற்போது முதல் காலாண்டு 2020-21 க்கு ஆண்டுக்கு 7.6%) வழங்குகிறது. 

உத்தரவாத வருமானம்- SSY அரசாங்கத்தால் செயல்படுத்தும்  திட்டம் என்பதால், இது உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது. 

வரி நன்மை- SSY பிரிவு 80 சி இன் கீழ் ஆண்டுக்கு Rs. 1.5 லட்சம் வரை வரிவிலக்கு சலுகைகள் பெறலாம். 

முதலீடு- இந்த திட்டத்தில் ஒருவர் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு 250 ரூபாயும், அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாயும் செலுத்தலாம். எனவே பொருளாதார அடிப்படையில் பல்வேறு நிதி நிலைகளைக் கொண்டவர்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். 

கூட்டு வட்டி- Sukanya Samriddhi Yojana ஒரு சிறந்த நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். இந்த திட்டத்தில் வட்டி, கூட்டு வட்டி (compound interest) அடிப்படையில் வழங்கப்படுவதால் சிறிய முதலீடுகள் கூட நீண்ட காலத்திற்கு பெரும் வருவாயைக் கொடுக்கும். 

கணக்கை இடமாற்றம் செய்தல்- SSY  கணக்கை நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு (வங்கி / தபால் அலுவலகம்) இலவசமாக மாற்ற முடியும்.

PPF கணக்கை பற்றி தெரிந்து கொள்ள click செய்யவும்.

Sukanya Samriddhi Yojana கணக்கு open செய்வது எப்படி?

இந்த திட்டத்தை தபால் அலுவலகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பொது மற்றும் தனியார் வங்கி கிளைகளில் முதலீடு செய்யலாம். பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்ற ஆவணங்களுடன் தேவையான படிவம் மற்றும் காசோலை / வரைவு மூலம் ஆரம்ப வைப்பு ஆகியவற்றை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். 

முதலீட்டாளர்கள் SSY விண்ணப்ப படிவத்தை நிரப்பி அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது பொது / தனியார் துறை வங்கியில் இருந்து பெறலாம். அல்லது பின்வரும் வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம்.  

இந்திய ரிசர்வ் வங்கி வலைத்தளம்

இந்தியா போஸ்ட் வலைத்தளம்

பொதுத்துறை வங்கிகளின் தனிப்பட்ட வலைத்தளங்கள் (SBI,Indian Bank, PNB, போன்றவை)

தனியார் துறை வங்கிகளின் வலைத்தளங்கள் (ICICI வங்கி, Axis வங்கி மற்றும் HDFC  வங்கி) 

நீங்கள் எங்கிருந்து பதிவிறக்கம் செய்தாலும் SSY விண்ணப்ப படிவம் ஒரே மாதிரியாக தான் இருக்கும்.

விண்ணப்ப படிவத்தை நிரப்புவது எப்படி?

SSY விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரர்கள் பெண் குழந்தை குறித்து சில முக்கிய விவரங்களை வழங்க வேண்டும். பெண் குழந்தையின் சார்பாக கணக்கைத் திறக்கும் / அவள் சார்பாக டெபாசிட் செய்யும் பெற்றோர் / பாதுகாவலர் விவரங்களும் தேவை. SSY விண்ணப்ப படிவத்தில் இடம்பெறும் முக்கிய புலங்கள் பின்வருமாறு: 

  • பெண் குழந்தையின் பெயர் (முதன்மை கணக்கு வைத்திருப்பவர்)
  • பெண் குழந்தையின் பிறந்த தேதி
  • கணக்கைத் திறக்கும் பெற்றோர் / கார்டியன் பெயர் (கூட்டு வைத்திருப்பவர்)
  • ஆரம்ப வைப்புத்தொகை
  • காசோலை / டிடி எண் மற்றும் தேதி (ஆரம்ப வைப்புக்கு)
  • முதன்மை கணக்கு வைத்திருப்பவரின் பிறப்பு சான்றிதழ் விவரங்கள் (சான்றிதழ் எண், வழங்கப்பட்ட தேதி போன்றவை)
  • பெற்றோர் / பாதுகாவலர் விவரங்கள் (ஓட்டுநர் உரிமம், ஆதார் போன்றவை)
  • தற்போதைய மற்றும் நிரந்தர முகவரி (பெற்றோர் / பாதுகாவலர் அடையாள ஆவணத்தின்படி)
  • மற்ற KYC ஆவணங்களின் விவரங்கள் (பான், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை) 

மேற்கண்ட விவரங்களை பூர்த்தி செய்து, படிவத்தில் கையொப்பமிட்டு தபால் அலுவலகம் / வங்கி கிளைகளில் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் உரிய ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் சேர தகுதியானவர்கள் யார்?

  1. பெண் குழந்தைகள் மட்டுமே SSY கணக்கு open செய்ய முடியும் 
  2. கணக்கு தொடங்கும் போது அந்த பெண் குழந்தைக்கு 10 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்
  3. பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது legal guardian (சட்டப்பூர்வ பாதுகாவலர்கள்) மட்டுமே ஒரு SSY கணக்கைத் திறக்க முடியும்
  4. ஒரு பெண் குழந்தைக்கு அதிகபட்சமாக ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும்.
  5. ஒரு குடும்பத்திற்கு இரண்டு SSY கணக்குகள் மட்டுமே ஓபன் செய்யலாம்.
  6. சில சிறப்பு நிகழ்வுகளில் இரண்டுக்கும் மேற்பட்ட சிறுமிகளுக்காக PPY  கணக்கு திறக்கப்படலாம்- காரணங்களை கீழே காணவும்.
  • முதலில் ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தால் மூன்றாவது கணக்கு தொடங்கலாம்.
  • ஒரே  பிரசவத்தில் 2 அல்லது 3 குழந்தைகள் பிறப்பதற்கு முன்பு ஒரு பெண் குழந்தை இருந்தால் மூன்றாவது கணக்கு ஓபன் செய்யலாம்.
  • முதலில் ஒரே  பிரசவத்தில் 2 அல்லது 3 பெண் குழந்தைகள் பிறந்த பிறகு ஒரு பெண் பிறந்தால் மூன்றாவது SSY கணக்கைத் திறக்கலாம்.

எவ்வளவு முதலீடு செய்யலாம்?

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்ச ஆண்டு பங்களிப்பு 250 ரூபாய். அதிகபட்ச பங்களிப்பு ஒரு நிதியாண்டில் 1.5 லட்சம் ரூபாய். கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச 250 ரூபாய் தொகையை யாவது நீங்கள் முதலீடு செய்ய வேண்டும்.

எவ்வளவு காலம் முதலீடு செய்ய வேண்டும்?

Sukanya Samriddhi Yojana வின் முதிர்வு காலம் 21 வருடங்களாகும். கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 15 வருடங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். பிறகு அடுத்த 6 வருடங்களுக்கு முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கணக்கு முதிச்சி அடையும் போது அந்த 6 வருடங்களுக்கும் சேர்த்து வட்டி வழங்கப்படும்.

வட்டிவிகிதம் என்ன?

SSY திட்டத்தின் தற்போதைய Q1 (ஏப்ரல்-ஜூன்) நிதியாண்டு 2021-22 க்கு, வட்டி விகிதங்கள் 7.6% p.a. ஆகும். இந்த வட்டி விகிதத்தை மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டுக்கும் நிர்ணயம் செய்கிறது. இந்த வட்டி விகிதம் அரசின் முடிவை ஒட்டி மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் தற்போது மத்திய அரசால் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களில் இந்த திட்டத்துக்கு தான் அதிக வட்டி வழங்க படுகிறது.

உதாரணமாக நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு எவ்வளவு வட்டி, எவ்வளவு முதிர்வு தொகை கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வருட முதலீடு

வட்டி விகிதம்

மொத்த முதலீடு

மொத்த வட்டி

முதிர்வு தொகை

1,50,000

7.6%

22,50,000

41,15,155

63,65,155

1,00,000

7.6%

15,00,000

27,43,436

42,43,436

50,000

7.6%

7,50,000

13,71,718

21,21,718

25,000

7.6%

3,75,000

6,85,859

10,60,859

10,000

7.6%

1,50,000

2,74,344

4,24,344

வரிவிலக்கு நன்மைகள்:

இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் EEE என்ற முறையில் வரிவிலக்கு பெறுகிறது. அதாவது முதலீடு செய்யப்பட்ட அசல், சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வு தொகை ஆகிய மூன்றுக்கும் வரிவிலக்கு உண்டு. செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யப்படும் முதலீடு, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80 சி இன் கீழ், முதலீடு செய்யப்பட்ட அசல் தொகைக்கு வரி விலக்கு நன்மை ஆண்டுக்கு ரூ .1.5 லட்சம் வரை பெறலாம்.

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பணம் எடுப்பது எப்படி?

SSY கணக்கு தொடங்கி 21 வருடங்கள் முடிந்து விட்டால், அந்த கணக்கு முதிர்ச்சி அடைந்து விடும். எனவே அந்த பணத்தை அந்த பெண் குழந்தை உரிய ஆவணங்களை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். 

கணக்கு வைத்திருக்கும் பெண் 18 வயது நிரம்பியிருந்தால் தனது உயர் கல்விக்கு தன் கணக்கில் உள்ள பணத்தில் 50% பணத்தை பெற முடியும்.

முன்கூட்டியே கணக்கை close செய்ய முடியுமா?:

குறைந்தது 21 வருடம் கணக்கை தொடர வேண்டும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் SSY கணக்கை முன்கூட்டியே close செய்யலாம். அதை கீழே காணலாம்.

  • 18 வயது நிறைவடைந்த பெண் குழந்தை தன் திருமணத்திற்காக கணக்கை close செய்ய முடியும்.
  • கணக்கு வைத்திருக்கும் பெண் குழந்தை இறந்துவிட்டால், கணக்கு வைத்திருப்பவரின் இறப்பை சரிபார்க்கும் தொடர்புடைய ஆவணங்களை பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் சமர்ப்பிக்க வேண்டும். அதை அதிகாரிகள் சரிபார்த்த பிறகு கணக்கு close   செய்யப்பட்டு பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்படும்.

செயலற்ற கணக்கை மீட்பது எப்படி?

ஒவ்வொரு வருடமும் குறைந்தது 250 ருபாய் செலுத்த வில்லை என்றால் கணக்கு செயலற்ற (Inactive ) நிலைக்கு சென்று விடும். அந்த கணக்கை மீண்டும் தொடர,  நிலுவையில் உள்ள ஒவ்வொரு வருடத்திற்கும் குறைந்தது 250 ரூபாய் செலுத்தி அத்துடன் ஒவ்வொரு வருடத்திற்கும் 50 ருபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதன்பிறகு கணக்கை தொடரலாம்.

வேறு வங்கி கிளை /தபால் நிலையத்திற்கு மாற்ற முடியுமா?

SSY  கணக்கை இந்தியாவின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு எளிதாக மாற்றலாம். இந்த கணக்கை ஒரு தபால் நிலையத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அல்லது ஒரு வங்கியின் கிளையிலிருந்து இன்னொரு இடத்திற்கு எளிதாக மாற்றலாம். 

உங்கள் SSY கணக்கை transfer செய்ய தபால் நிலையத்தில் transfer செய்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் ஒரு வங்கி கிளையில் இருந்து மற்ற கிளைக்கு மாற்ற விண்ணப்ப படிவத்தை online அல்லது அந்த வங்கி கிளையில் பெற்று கொள்ளலாம்.

Sukanya Samriddhi Yojana / செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பிற முக்கிய அம்சங்கள்:

ஒருவர் SSY கணக்கில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 250 ரூபாய் செலுத்த வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் அந்த கணக்கு “default account” என்று அழைக்கப்படும். முதிர்வு தேதி வரை, இந்த கணக்கில் நிர்ணயிக்கப்பட்ட வட்டி செலுத்தப்படும். 

ஒரு பெண் குழந்தை 18 வயதிற்குப் பிறகு தனது சொந்த கணக்கை இயக்க முடியும். அவளுக்கு 18 வயதாகிவிட்டால், தேவையான அனைத்து ஆவணங்களையும் கணக்கு வைத்திருக்கும் தபால் அலுவலகம் / வங்கியில் சமர்ப்பித்த பின்னர் SSY கணக்கை இயக்கலாம்.

கேள்வி & பதில்கள்:

1. SSY கணக்கில் கடன் வாங்க முடியுமா?

முடியாது. SSY கணக்கிற்கு எதிராக கடன் வாங்க முடியாது

2. முன்கூட்டியே SSY கணக்கை close செய்ய முடியுமா?

ஒரு சில சந்தர்ப்பங்களில் முன்கூட்டியே கணக்கை close செய்யலாம். அதாவது, கணக்கு வைத்திருப்பவர் இறந்து விட்டால் அல்லது கொடிய வியாதியினால் அவதியுற்றால் முன்கூட்டியே close செய்யலாம். 

3. SSY கணக்கில் முதலீடு, வட்டி, முதிர்ச்சி தொகைக்கு வரிவிலக்கு உண்டா?

ஆமாம். இந்த மூன்றிற்கும் வரிவிலக்கு உண்டு.

4. Sukanya Samriddhi Yojana Account தகுதியானவர்கள் யார்?

10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கு தொடங்கலாம்

5. Sukanya Samriddhi Yojana வில் எத்தனை கணக்கு தொடங்கலாம்?

ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்திற்கு 2 கணக்கு மட்டுமே தொடங்க முடியும். (ஒரே பிரசவத்தில் 2 அல்லது 3 குழந்தைகள் பிறந்தால் அதற்கு விதிவிலக்கு உண்டு)

6. SSY கணக்கில் வருடத்திற்கு எவ்வளவு முதலீடு செய்யலாம்?

குறைந்தது Rs. 250, அதிகபட்சம் Rs. 150000.

7. SSY கணக்கு முதிர்ச்சி (maturity) காலம் எவ்வளவு?

முதிர்ச்சி காலம் 21 வருடங்கள். 15 வருடங்கள் முதலீடு செய்ய வேண்டும். மீதி 6 வருடங்களுக்கு முதலீடு செய்ய வேண்டியதில்லை.

8. SSY கணக்கில் ஒரு பகுதி (partial) பணத்தை எடுக்க முடியுமா?

18 வயது நிரம்பியிருந்தால் உயர் கல்விக்காக 50% பணத்தை பெற முடியும்.

RELATED ARTICLES

Most Popular