Homeசெய்திகள்National Pension Scheme in Tamil | NPS Scheme in Tamil | தேசிய...

National Pension Scheme in Tamil | NPS Scheme in Tamil | தேசிய ஓய்வூதிய திட்டம்

National Pension Scheme (NPS) / தேசிய ஓய்வூதிய திட்டம் 2004 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டது.  பின் 2009 ஆம் ஆண்டு அனைத்து குடிமக்களுக்கும் ஓய்வூதிய பலன்களை வழங்கும் நோக்கத்துடன் விரிவு படுத்தப்பட்டது.

National Pension Scheme (NPS) / தேசிய ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன?

தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாகும். இந்த ஓய்வூதிய திட்டத்தில் தனியார், பொதுத்துறை மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என யார் வேண்டுமானாலும் இணைந்து பயன் பெறலாம். ஆனால் இராணுவ வீரர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது.

NPS திட்டமானது மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாயமானது. மற்ற அனைத்து மக்களுக்கும் இது ஒரு தன்னார்வ ஓய்வூதிய திட்டமாகும்.

National Pension Scheme (NPS) / தேசிய ஓய்வூதிய திட்டம், இந்திய அரசு மற்றும்  Pension Fund Regulatory and Development Authority (PFRDA) என்ற அமைப்பின் மேற்பார்வையில் இயங்குகின்றது.

National Pension Scheme Eligibility | தேசிய ஓய்வூதிய திட்டம் சேர்வதற்கான தகுதிகள்

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கு கிழ்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டும்.

  • Indian citizen அல்லது NRI 
  • வயது வரம்பு: 18 முதல் 70 வரை 
  • விண்ணப்பப் படிவம் நிரப்பி தேவையான KYC ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

National Pension Scheme Benefits | தேசிய ஓய்வூதிய திட்டம் பயன்கள்

  • வருமான வரி சட்டம் பிரிவு 80 CCD(1) கீழ் ஆண்டுக்கு 1.50 லட்சம் வரை வருமான வரி விலக்கு கிடைக்கும். 
  • வருமான வரி சட்டம் பிரிவு 80 CCD(1B) கீழ் ஆண்டுக்கு 50000 வரை கூடுதலாக வருமான வரி விலக்கு கிடைக்கும்.
  • இது PPF போன்ற பிற வரி சேமிப்பு முதலீடுகளை விட அதிக வருமானத்தை வழங்குகிறது.
  • உங்களுக்கு விருப்பமான முறையில் பிரித்து முதலீடு செய்யலாம்.

National Pension Scheme கணக்கு தொடங்குவது எப்படி?

NPS கணக்கை offline மற்றும் onlineல் தொடங்கலாம்.

Offline NPS account தொடங்குவதற்கு PFRDA வுடன் பதிவு செய்துள்ள வங்கியில் நேரில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கணக்கை தொடங்கலாம். NPS கணக்கு open செய்தவுடன் உங்களுக்கு PRAN (Permanent Retirement Account Number) கார்டு அனுப்பப்படும்.

Online NPS account ஐ தற்போது எளிதாக தொடங்கலாம். enps.nsdl.com என்ற இணைய தளத்திற்கு சென்று வேண்டிய தகவல்களை நிரப்பவும். நிரப்பியவுடன் உங்கள் மொபைல் number க்கு OTP அனுப்பப்படும். OTP verify செய்தவுடன் PRAN number கிடைக்கும். அதை NPS login செய்ய பயன்படுத்தலாம்.

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் யார் முதலீடு செய்யலாம்?

  • தனியார் கம்பெனியில் வேலை செய்யும் நபர்கள் 80C வருமான வரி விலக்கு வேண்டுவோர் இதில் சேரலாம்.
  • தனது வேலையில் இருந்து ஒய்வு பெற்றவுடன் நிரந்தர வருமானம் வேண்டுவோர் இணையலாம்.

National Pension Scheme பணம் திரும்ப பெற விதிகள்

தற்போதைய விதிகள் படி மொத்த முதிர்வு தொகையில் 60% பெற்று கொள்ளலாம். மீதம் உள்ள 40% தொகையை annuity planல் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் முதிர்வு தொகை 5 லட்சம் அல்லது அதற்கு குறைவாக இருப்பின் annuity planல் முதலீடு செய்ய தேவை இல்லை. மொத்த முதிர்வு பணத்தையும் திரும்ப பெறலாம். இதற்கு வருமான வரி இல்லை.

NPS முதிர்வு காலம் முடியும் முன் வெளியேற விரும்பினால் 80% தொகையை Annuity planல் முதலீடு செய்யவேண்டும். இந்த தொகை பென்ஷன் வழங்க பயன்படுத்தப்படும். மீதமுள்ள தொகை சந்தாதாரருக்கு வழங்கப்படும். மொத்த முதிர்வு தொகை 2.5 இலச்சத்திற்கு குறைவாக இருப்பின் 100% தொகையை எடுத்து கொள்ளலாம்.

NPS திட்டத்தின் வகைகள்

NPS ல் Tier 1 and Tier 2 என இரண்டு வகையான கணக்குகள் உள்ளன.

  • Tier 1 கணக்கு அனைவரும் கட்டாயம் தொடங்க வேண்டும்.
  • பணத்தை எடுக்க வேண்டும் என்றால் மேலே குறிப்பிட்டுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும்.
  • Rs.200000 வரை வருமான வரி விலக்கு பெறலாம். (Under 80C and 80CCD)

Tier 2 account தன்னார்வ தேர்வு ஆகும். ஆனால் Tier 2 அக்கௌன்ட் தொடங்க Tier 1 அக்கௌன்ட் அவசியம்.

  • பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம்.
  • அரசாங்க ஊழியர்களுக்கு 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெறலாம். மற்றவர்களுக்கு வருமான வரி விலக்கு கிடையாது.

NPS திட்டத்தில் 2 வகையில் முதலீடு செய்யலாம்.

  • Auto choice : நீங்கள் auto choice முறையை தேர்ந்தெடுத்தால் , உங்களுடைய வயது மற்றும் சில காரணங்களை வைத்து முதலீடு செய்யப்படும்.
  • Active choice: இதில் வாடிக்கையாளர் தங்களுக்கு விருப்பமான முறையில் பிரித்து முதலீடு செய்யலாம்.

National Pension Scheme ல் வட்டி விகிதம் என்ன?

மக்களால் முதலீடு செய்யும் பணம் பங்குகள், அரசு பத்திரம் மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றில் முதலீடு செய்ய படுகிறது. எனவே வட்டி விகிதமானது சந்தையில் உள்ள ஏற்ற இறக்கத்தை பொறுத்து வேறுபடும். ஆனால் பொதுவாக PPF போன்ற திட்டங்களை விட அதிக பணத்தை திரும்ப பெற முடியும்.

PPF பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்.

கிழே ஒரு உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் 25 வயதில் இருந்து 60 வயது வரை மாதம் Rs. 1000 செலுத்தினால் எவ்வளவு தொகை கிடைக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது.

  1. NPS Official Website
  2. NPS Calculator

FAQs

1. 60 வயதிற்கு முன் NPS கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியுமா?

படிப்பு, பிள்ளைகளின் கல்யாணம், மருத்துவ தேவை, சொத்து அல்லது புதிய தொழில் தொடங்க என மேற்கண்ட காரணங்களில் ஏதேனும் இருப்பின் பணத்தை இடையில் எடுக்கலாம். ஆனால் அதற்கு 3 வருடம் முதலீடு செய்து இருக்க வேண்டும். மேலே சொன்ன விதிகள் பொருந்தினால் 25% தொகையை பெற முடியும்.

2. யார் NPS திட்டத்தில் சேரலாம்?

18-70 வயது உள்ள இந்திய குடிமக்கள் அல்லது NRI ஆகியோர் இந்த திட்டத்தில் சேரலாம்.

3. National Pension Secheme முதிர்வு காலம் என்ன?

NPS accountல் 60 வயது வரை கட்டாயம் முதலீடு செய்ய வேண்டும். NPS கணக்கின் முதிர்வு வயது 60 ஆகும்.

4. Fund Manager என்றால் என்ன?

Fund Manager என்பவர் மக்கள் செலுத்தும் பணத்தை லாபம் தரக்கூடிய பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்பவர்.

5. NPS திட்டத்தில் fund manager மாற்ற முடியுமா?

ஆம், நீங்கள் பென்ஷன் திட்டம் மற்றும் fund manager ஐ  மாற்ற விரும்பினால் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.

Conclusion:

நாம் ஒய்வு பெற்ற பிறகு நிரந்தர வருமானம் வேண்டுமென்றால் கட்டாயமாக இந்த திட்டத்தில் சேரவேண்டும். குறிப்பாக இளம் வயதிலேயே இந்த திட்டத்தில் சேர்ந்தால் குறைந்த ப்ரீமியத்தில் அதிக லாபம் பெற முடியும். இந்த திட்டத்தில் சேர்வதனால் நமக்கு இரண்டு நன்மைகள் உள்ளன. ஒன்று நாம் வேலை செய்யும் காலத்தில் Rs. 200000 வரை வருமான வரி விலக்கு பெற முடியும். இரண்டு, நாம் ஒய்வு பெற்ற பிறகு நிரந்தர வருமானம் பெற உதவும்.

எனவே அனைத்து தரப்பு மக்களும் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

RELATED ARTICLES

Most Popular