Homeசெய்திகள்Mutual Funds என்றால் என்ன? Mutual Funds எவ்வாறு செயல்படுகிறது?

Mutual Funds என்றால் என்ன? Mutual Funds எவ்வாறு செயல்படுகிறது?

நம்மில் பெரும்பாலானோர் Mutual Funds என்ற வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் பலருக்கு Mutual funds என்றால் என்ன? Mutual funds எவ்வாறு செயல்படுகிறது? என தெரியாமல் இருக்கலாம். அந்த கேள்விகளுக்கான விடையை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Mutual Funds என்றால் என்ன?

சுலபமாக சொல்ல வேண்டும் என்றால், Mutual funds என்பது பல முதலீட்டாளர்கள் இணைந்து முதலீடு செய்யும் பண தொகுப்பாகும். இந்த பணத்தை professional fund managers பல திட்டங்களில் முதலீடு செய்வார்கள். 

Mutual fund என்பது பல முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை சேகரிக்கும் ஒரு டிரஸ்ட் ஆகும். இவ்வாறு சேகரித்த பணத்தை பங்குகள், பத்திரங்கள் மற்றும் இதர சொத்துக்களில் முதலீடு செய்து வரும் வருவாயை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் திட்டமாகும். 

அனைத்து மியூச்சுவல் ஃபண்ட்களும் Securities and Exchange Board of India (SEBI) என்ற அமைப்பின் கண்காணிப்பில் இயங்குகின்றது. வாடிக்கையாளர்களின் முதலீட்டை பாதுகாக்கும் பொருட்டு SEBI அமைப்பு பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. இதன் மூலம் mutual fund ல் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்க்கு நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.

Mutual Funds நன்மைகள் என்ன?

  1. Mutual funds ல் முதலீடு செய்வதற்கு நமக்கு பங்கு சந்தை பற்றி அறிந்து இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நமது professional fund managers சிறந்த பங்குகளில் முதலீடு செய்யும் வேலையை பார்த்துக்கொள்வார்.
  2. நாம் தனியாக பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் நம்மிடம் நிறைய முதலீடு இருக்க வேண்டும். ஆனால் mutual fund மூலம் முதலீடு செய்ய சிறிய முதலீடே போதுமானது.
  3. இந்த துறையில் உள்ள சிறந்த நிபுணர்களை கொண்டு நமது பணம் பல்வேறு பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. எனவே இதில் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  4. மற்ற சேமிப்பு திட்டங்களில் பெரும் வருமானத்தை விட mutual fund ல் அதிக லாபம் பெற முடியும். ஒப்பீட்டளவில் அபாயமும் குறைவு.
  5.  Equity Linked Savings Scheme (ELSS) என்ற திட்டத்தில் முதலீடு செய்து வருமான வரி சட்டம் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பெற முடியும். இந்த திட்டத்தில் ஒருவர் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம் மேலும் 46800 வரை வரி சேமிப்பு பெறலாம்.
  6. நமக்கு தேவைப்படும் போது நம்மிடம் உள்ள unitகளை விற்று பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

Mutual Fund திட்டத்தில் யார் சேரலாம்?

  1. வருமான வரி சேமிக்க விரும்புவோர் சேரலாம்.
  2. பங்கு வர்த்தகம், அரசு பத்திரங்கள் மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்யும் ஆர்வம் இருக்கும். ஆனால் அதை பற்றி சரியான புரிதல் இருக்காது. இதை போன்ற நபர்கள் mutual fund ல் சேரலாம்.
  3. பங்கு சந்தையில் முதலீடு செய்து அதை கவனிக்க நேரம் இல்லாதவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
  4. பொதுவாக பெரிய நிறுவனத்தில் முதலீடு செய்ய அதிக அளவில் பணம் தேவைப்படும். சாதாரண மனிதனால் முதலீடு செய்ய முடியாது. ஆனால் mutual fund ல் முதலீடு செய்வதனால் சிறிய முதலீட்டில் பெரிய நிறுவனத்தில் முதலீடு செய்ய முடியும்.
  5. மாதம் சிறு தொகையை சிறந்த முறையில் செய்ய விரும்புவோர்.

Mutual Fund ல் Net Asset Value என்றால் என்ன?

Net Asset Value (NAV) என்பது மியூச்சுவல் ஃபண்ட் ஒரு யூனிட்டுக்கு எவ்வளவு நிகர சொத்து மதிப்பு என்பதை குறிக்கும். NAV என்பது ஒரு குறிப்பிட்ட நாளில் (அனுமதிக்கப்பட்ட செலவுகள் மற்றும் கட்டணங்கள் கழிக்கப்பட்டு) முதலீடு செய்த பங்குகள், பத்திரங்கள் மற்றும் பத்திரங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பாகும். ஒரு யூனிட்டுக்கான NAV என்பது, ஒரு குறிப்பிட்ட நாளில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் உள்ள அனைத்து யூனிட்களின் சந்தை மதிப்பு மற்றும் குறிப்பிட்ட தேதியில் உள்ள திட்டத்தின் மொத்த யூனிட்களின் எண்ணிக்கையால் வகுக்கப்படும்.

Mutual Fund வகைகள் என்ன?

Mutual fund ல் பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளது. இதை risk, structure, asset class ஐ பொறுத்து வகை படுத்தலாம். அதில் சில திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Based on Asset: சொத்துக்களில் முதலீடு மற்றும் முதலீட்டு இலக்குள்  ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கீழே உள்ள திட்டங்கள் செயல்படுகிறது.

Equity Funds, Debt Funds, Liquid Funds, Hybrid Funds, Tax-Saving Funds, Growth Funds, Income Funds,  Pension Funds, Money Market Funds, Fixed Maturity Funds, Aggressive Growth Funds, and Capital Protection Funds.

Based on Structure: open-ended funds, close-ended funds, and interval funds ஆகிய திட்டங்கள் உள்ளது.

Based on Risk: திட்டத்தில் உள்ள ரிஸ்க் ஐ பொறுத்து Very Low-Risk Funds, Low-Risk Funds, Medium-risk Funds மற்றும் High-Risk Funds ஆகிய திட்டங்கள் உள்ளது.

Mutual fund கால்குலேட்டரை ஓபன் செய்ய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.

Mutual fund calculator

FAQs

Mutual Funds பாதுகாப்பானதா?

பொதுவாக mutual funds ஒரு சிறந்த பாதுகாப்பான முதலீடு ஆகும். ஆனால் அது எப்போதும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. உறுதியான வருவாய்க்கு உத்திரவாதம் இல்லை.

Mutual fund எந்த வயதில் இருந்து முதலீடு செய்யலாம்?

18 வயதிலிருந்து முதலீடு செய்யலாம்.

Mutual fund கணக்கை எந்த நேரமும் close செய்ய முடியுமா?

ஆமாம். நீங்கள் விரும்பும் போது கணக்கை கிளோஸ் செய்து பணத்தை திரும்ப பெற முடியும்.

Mutual fund வருவாய்க்கு வரி உண்டா?

ஆம் உண்டு. ஈவு தொகை மற்றும் மூலதன வருவாய் இரண்டுக்கும் வரி உண்டு. ஆனால் Equity Linked Savings Scheme (ELSS) என்ற திட்டத்தில் முதலீடு செய்தால் வரி விலக்கு சட்டம் 80C யின் படி வரி விலக்கு பெறலாம்

NAV என்றால் என்ன?

NAV என்றால் Net Asset Value. Mutual fund திட்டத்தின் செயல்பாட்டு மதிப்பை குறிக்க இது பயன்படுகிறது.

Broker இல்லாமல் mutual funds கணக்கு தொடங்க முடியுமா?

ஆம். நீங்கள் ஆன்லைன் மூலம் புரோக்கர் இல்லாமல் mutual fund கணக்கை தொடங்கலாம்.

Mutual fund stocksஐ விட ஆபத்து குறைந்ததா?

Mutual fund மற்றும் ஸ்டாக் மார்க்கெட் இரண்டுமே ஆபத்து நிறைந்த முதலீடுதான். ஆனால் mutual fund ல் ஆபத்து குறைவு. ஏனென்றால் mutual fund ல் பணத்தை பங்குகள், பத்திரங்கள் மற்றும் சொத்துக்கள் என பல வழிகளில் முதலீடு செய்வதால் ஆபத்து குறைவு.

ஏன் Mutual funds ல் பணம் இழப்பு ஏற்படுகிறது?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் அதிக வருமானத்தைத் பெற, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறார்கள். எனவே அந்த நிதி பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. எனவே பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்தால் இந்த நிதிகள் பாதிக்கப்படும், எனவே மியூச்சுவல் ஃபண்டுகளிலும் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகின்றன.

Mutual fund ஓபன் செய்ய Demat கணக்கு வேண்டுமா?

Mutual fund கணக்கு தொடங்க Demat கணக்கு கட்டாயமில்லை. ஆனால் Demat கணக்கு இருந்தால் ஸ்டோக்ஸ், bonds மற்றும் mutual fund போன்ற பல்வேறு முதலீடுகளை கையாள்வதற்கு எளிதாக இருக்கும்.

Conclusion

குறைந்த செலவு, குறைந்த ரிஸ்க் மற்றும் அதிக வாய்ப்பு ஆகியவற்றுடன், மிகவும் எளிமையான முதலீட்டு வழியை விரும்புவோருக்கு, mutual fund ஒரு சிறந்த திட்டம் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் mutual fund பங்கு சந்தையுடன் தொடர்புடையது. எனவே பங்கு சந்தையின் ஏற்ற, இறக்கத்தை பொறுத்து முதலீடு அபாயத்திற்கு உட்பட்டது. இதை நினைவில் வைத்து முதலீடு செய்ய வேண்டும்.

National Pension Scheme பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

RELATED ARTICLES

Most Popular