Homeசெய்திகள்22K மற்றும் 24K தங்கம் வேறுபாடு என்ன?

22K மற்றும் 24K தங்கம் வேறுபாடு என்ன?

பொதுவாக நாம் அனைவரும் தங்க நகை பற்றி பேசும் போது 20K, 22K, 24K என கேள்வி பட்டிருப்போம். எனவே இந்த கட்டுரையில் 22K மற்றும் 24K தங்கம் என்றால் என்ன, தங்கம் எவ்வாரு கணக்கிட படுகிறது, 22K மற்றும் 24K தங்கம் வேறுபாடு என்ன? என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

உலகிலேயே அதிகம் தங்கத்தை பயன் படுத்தும் நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவில் மக்கள் தங்க நகைகளை விரும்பி அணிகிறார்கள். எனவே அனைவரும் தங்க நகைகளை வாங்குகின்றனர். சிலர் தங்கத்தில் முதலீடு செய்யும் நோக்கத்திலும் வாங்குகிறார்கள். எனவே தங்கத்தை பற்றி பொதுவான சில விஷயங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Table of Contents

கேரட் என்றால் என்ன? | What is Mean by Karat in Tamil?

கேரட் (Karat or K) என்பது தங்கத்தின் தரத்தை குறிக்கும் குறியீடு ஆகும். தங்கத்தின் தரத்தின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதன் தரம் அதிகமாகும். தங்கத்தின் தரத்தின் அளவுகோல் 0-24 என்ற எண்ணிக்கையில் இருக்கும். 24 கேரட் தங்கம் சுத்தமான தங்கமாகும். எண்ணிக்கை குறைய குறைய தங்கத்தின் தரம் குறையும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

சுத்தமான நிலையில் தங்கம் மிகவும் வலுவில்லாமல் இருக்கும். எனவே தங்க நகைகள் செய்ய காப்பர், நிக்கல், வெள்ளி,சிங்க் போன்ற வேறு சில உலோகங்கள் சேர்க்க படும். அவ்வாறு செய்வதனால் தங்க நகை உறுதியாக இருக்கும்.

இந்தியாவில் எத்தனை விதமான தங்க நகைகள் பயன் படுத்த படுகிறது?

இந்தியாவில் பொதுவாக 10K, 12K, 14K, 18K, 22K, and 24K போன்ற தரத்திலான தங்கம் பயன் படுத்த படுகிறது. பெரும்பாலும் 24K தங்க நகை செய்ய உபயோகிக்க மாட்டார்கள்.

22 கேரட் தங்கம் என்றால் என்ன? | What is 22K Gold?

22 கேரட் தங்கத்தில் 22 பகுதி தங்கம் மற்றும் 2 பகுதி வேறு உலோகங்கள் (காப்பர், நிக்கல், சிங்க், வெள்ளி) சேர்க்க பட்டிருக்கும். 22K தங்கம் 91.67% அளவு சுத்தமான தங்கத்தை கொண்டுள்ளதால், 916 கோல்ட் என்றும் அழைப்பார்கள். இதில் வேறு உலோகங்களும் சேர்க்க பட்டுள்ளது. எனவே இதில் நகைகள் செய்யும் போது உறுதியாகவும் நீடித்து உழைக்கும் வகையிலும் இருக்கும்.

24 கேரட் தங்கம் என்றால் என்ன? What is 24K Gold?

24 கேரட் தங்கம் 99.99% தூய்மையான தங்கமாகும். இதை 999 கோல்ட் என்று அழைக்கலாம். உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். இது சுத்தமான தங்கம் என்றால் ஏன் 100% சுத்தமாக இல்லை? ஏனெனில் 100% சுத்தமான தங்கம் மிகவும் மென்மையாக இருக்கும். எனவே அறை வெப்பநிலையில் தங்கத்தின் வடிவத்தை பாதுகாப்பது கடினம். எனவே சில நடைமுறைகளை பயன்படுத்தி, 99.99% சுத்தமான தங்கமாக மாற்றப்படுகிறது.

24 கேரட் சுத்தமான தங்கமாதலால், எப்போதும் 18K அல்லது 22K தங்கத்தின் விலையை விட அதிகமாக இருக்கும். பொதுவாக 24K தங்கம் முதலீடு செய்ய பயன் படுத்தப்படும்.

தங்கம் எதற்கு பயன்படுத்த படுகிறது?

பொதுவாக இந்தியாவில் தங்கம் அணிவது என்பது கௌரவமாக பார்க்க படுகிறது. எனவே ஆண்கள், பெண்கள் என அனைவரும் தங்கம் அணிய ஆசை படுகிறார்கள்.

இந்தியாவில் பழங்காலத்திலிருந்து தங்கம் என்பது மக்களின் வாழ்க்கையில் ஒரு சேமிப்பு முறையாகும். எனவே முதலீடு செய்வதற்க்கு தங்கம் பயன் படுகிறது.

முக்கிய வீட்டு நிகழ்ச்சிகள், கல்யாணம், பிறந்த நாள் போன்ற பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு தங்க நகை பரிசாக கொடுப்பது என்பது வழக்கமாக உள்ளது.

இந்தியாவில் தங்கத்தின் விலையை யார் நிர்ணயம் செய்கிறார்கள்?

The Indian Bullion Jewellers Association or the IBJA என்ற அமைப்பு இந்தியாவில் தங்கத்தின் விலையை தினமும் நிர்ணயம் செய்கிறார்கள். இந்த அமைப்பில் பெரிய தங்க நகை டீலர்கள், வியாபாரிகள் போன்றோர் உள்ளனர். அவர்கள் இணைந்து தங்கத்தின் விலை நிர்ணயம் செய்கிறார்கள். இதை பொறுத்து தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கம் இருக்கும்.

தங்கத்தின் விலை கட்டுப்படுத்தும் காரணிகள் என்ன?

தங்கத்தின் விலை பல காரணிகளால் முடிவு செய்ய படுகிறது. உதாரணமாக உற்பத்தி, தேவை, முதலீட்டாளர்கள், டாலர் மதிப்பு போன்ற பல காரணங்கள் உள்ளன. அதே போல தங்கம் இந்தியாவில் உற்பத்தி செய்வது மிக மிக குறைவு. எனவே நாம் நம் தேவைக்கு இறக்குமதி செய்யவேண்டி உள்ளது. எனவே தங்கத்தின் விலை மற்ற நாட்டு பொருளாதாரத்துடன் தொடர்புடையது. அதனால் தான் தங்கத்தின் விலை தினமும் வேறு படுகிறது.

நகை கடையில் விலை எவ்வாறு முடிவு செய்ய படுகிறது?

பொதுவாக நகை விற்பனையாளர்கள், கீழ் உள்ள பார்மோலாவை உபயோகிரார்கள். இது சில நகை கடைகளில் வேறுபடும்.

தங்க நகை விலை= தங்கம் விலை X தங்கத்தின் எடை (கிராம்) + செய்கூலி + ஜிஸ்டீ

எந்த நாடு தங்கத்தின் விலையை முடிவு செய்கிறது?

தங்கத்தின் விலை லண்டனில் முடிவு செய்ய படுகிறது. இதன் விலை டாலரில் முடிவு செய்வார்கள். அதை பொறுத்து உலகெங்கும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும்.

உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடு எது?

உலகிலேயே அதிக அளவில் தங்கம் வைத்துள்ள நாடு அமெரிக்கா ஆகும். அமெரிக்கா 8 ஆயிரம் டன் தங்கம் கையிருப்பு வைத்துள்ளது. அதை தொடர்ந்து ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகள் அதிக அளவில் தங்கம் வைத்துள்ளது.

ஒரு பவுன் அல்லது சவரன் என்றால் என்ன?

ஒரு பவுன் அல்லது ஒரு சவரன் என்பது 8 கிராம் தங்கத்திற்கு சமம். நம் இந்தியாவில் தங்கத்தின் எடையை குறிக்க மக்கள் அதிகம் பயன் படுத்தும் பொதுவான வார்த்தை பவுன் அல்லது சவரன் ஆகும்.

ஒரு டோலா தங்கம் எவ்வளவு கிராம்?

டோலா என்பது இந்தியாவில் பண்டைய காலத்தில் தங்கத்தை அளக்க பயன் படுத்தப்பட்ட ஒரு அளவு முறை ஆகும். இன்று 1 டோலா தங்கத்தின் எடை 11.6638038 கிராமுக்கு சமம்.

அவுன்ஸ் என்றால் என்ன? What is Ounce?

ட்ராய் அவுன்ஸ் (Troy Ounce) என்பது விலை உயர்ந்த உலோகங்களை அளக்கும் முறையாகும். 1 ட்ராய் அவுன்ஸ் என்பது 31.1034768 கிராம்க்கு சமம்.

FAQs

22k and 24k தங்கத்திற்கு வேறுபாடு என்ன?

24 கேரட் தங்கம் 99.99% தூய்மையான தங்கமாகும். இதை 999 கோல்ட் என்றும் அழைப்பார்கள்.
22K தங்கம் 91.67% அளவு சுத்தமான தங்கமாகும். மீதம் உள்ள 8.33% வேறு உலோகங்கள் (காப்பர், நிக்கல், சிங்க், வெள்ளி) சேர்க்க பட்டிருக்கும்.

செய்கூலி என்றால் என்ன?

செய்கூலி என்பது தங்க நகை செய்ய குடுக்கும் பானமாகும். அதாவது மேக்கிங் சார்ஜஸ் என கூறலாம்.

சேதாரம் என்றால் என்ன?

தங்க நகை செய்யும் போது ஏற்படும் கழிவை (wastage) சேதாரம் என கூறுவார்கள். தங்க நகை செய்யும் போது தங்க துகள்கள் அதிகம் வெளியேறும். அவ்வாறு வெளியேறும் தங்கத்திற்கு சேதாரம் அல்லது wastage என கூறுவார்கள். உதாரணமாக 1 கிராம் தங்க நகை செய்ய 2 கிராம் தங்கம் தேவை படும் என வைத்து கொள்வோம். மீதம் உள்ள 1 கிராம் சேதாரத்தில் கணக்கிடப்படும்.

RELATED ARTICLES

Most Popular